ஆசிய வளர்ச்சி வங்கியுடன் ஒப்பந்தத்தில் ஈடுபட அமைச்சரவை ஒப்புதல்!
3 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெறுவதற்காக ஆசிய வளர்ச்சி வங்கியுடன் ஒப்பந்தங்களில் ஈடுபடுவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இயற்கை பேரிடர்களைத் தொடர்ந்து உயிர் பாதுகாப்பு சேவைகளை விரைவில் வழங்கும் நோக்கில் கடந்த 2009 ஆம் ஆண்டு ஆசிய வங்கியால் பசிபிக் பேரிடர் மீட்பு நிதி திட்டம் கொண்டுவரப்பட்டது.
அதன்படி, தித்வா சூறாவளி காரணமாக ஏற்பட்ட பேரழிவுடன் தொடர்புடைய அவசரகால மறுமொழித் திட்டத்திற்குத் தேவையான நிதியைப் பெற இலங்கை அரசாங்கம் ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதன்கீழ் 3 மில்லியன் அமெரிக்க டொலர்களை மானியமாக வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
எனவே, நிதியமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதியால் மானியத்தைப் பெற ஆசிய வளர்ச்சி வங்கியுடன் தொடர்புடைய ஒப்பந்தங்களில் ஈடுபடுவதற்கு சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
