நான்கு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது!
#SriLanka
Mayoorikka
1 hour ago
நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு இன்று மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இன்று (11) கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று இரவு 11.00 மணி வரை அமுலில் இருக்கும் இந்த எச்சரிக்கையின்படி, 04 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் 08 மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சில இடங்களில் கடுமையான மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதால், மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க பொதுமக்கள் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
