இலங்கைக்காக ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியத்துடன் கைக்கோர்த்துள்ள ஆஸ்திரேலியா!
டிட்வா சூறாவளியால் தூண்டப்பட்ட பரவலான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகளைப் பாதுகாப்பதற்காக அவசர மனிதாபிமான உதவிகளை வழங்க ஆஸ்திரேலிய அரசாங்கம், ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியத்துடன் (UNFPA) கூட்டு சேர்ந்துள்ளது.
இதற்காக ஆஸ்திரேலியா 500,000 டொலரை வழங்கியுள்ளது. இது கர்ப்பிணிப் பெண்கள், புதிய தாய்மார்கள், வயதான பெண்கள் மற்றும் குறைபாடுகள் உள்ள பெண்கள் உட்பட பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்காக ஏற்கனவே UNFPA ஏற்கனவே 700 கண்ணியம் கருவிகள், 200 மகப்பேறு கருவிகள் மற்றும் பண உதவிகளை வழங்கியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் குடியுரிமை, சுங்கம் மற்றும் பன்முக கலாச்சார விவகாரங்கள் மற்றும் சர்வதேச கல்விக்கான உதவி அமைச்சர் கௌரவ ஜூலியன் ஹில், இந்த மீட்சி காலத்தில் இலங்கைக்கு ஆதரவாக நிற்பதற்கான ஆஸ்திரேலியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
