பாதாள உலக கும்பலைச் சேர்ந்த படோவிட்ட அசங்கவின் பெண் சகாக்கள் இருவர் கைது!
பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான “படோவிட்ட அசங்க” என்று அழைக்கப்படும் அசங்க சானக்க பொன்சேகா என்பவரின் பெண் சகாக்கள் இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தெஹிவளை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்களான பெண்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த 35 மற்றும் 45 வயதுடையவர்கள் ஆவர். சந்தேக நபர்களான பெண்கள் இருவரும் “படோவிட்ட அசங்க”வுக்கு சொந்தமான போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து ஹெடீரோயின் போதைப்பொருளும், 92300 ரூபா பணமும், போதை மாத்திரைகளும் , கையடக்கத் தொலைபேசியும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து சந்தேக நபர்களான பெண்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
