இலங்கைக்கு 300,000 டொலர் நிதியுதவி வழங்கிய ஆசிய அனர்த்த முன்னாயத்த நிலையம்!

#SriLanka
Mayoorikka
1 day ago
இலங்கைக்கு 300,000 டொலர் நிதியுதவி வழங்கிய ஆசிய அனர்த்த முன்னாயத்த நிலையம்!

பேரனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் 300,000 டொலர் நிதியுதவியை வழங்கியுள்ள ஆசிய அனர்த்த முன்னாயத்த நிலையம், தேசிய அனர்த்த முன்னாயத்த மற்றும் முற்கூட்டிய எச்சரிக்கைக் கட்டமைப்பை மேம்படுத்தவேண்டியதன் அவசியம் குறித்து வெளிவிவகார அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளது.

 'தித்வா' சூறாவளி காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கி பல நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருப்பதுடன், இலட்சக்கணக்கானோர் தமது இருப்பிடங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் சர்வதேச நாடுகள், அரச சார்பற்ற அமைப்புக்கள், தனியார் நிறுவனங்கள் எனப் பல்வேறு தரப்பினரும் பல வழிகளிலும் இலங்கைக்கு உதவிகளை வழங்கிவருகின்றனர்.

 அந்தவகையில் ஆசிய அனர்த்த முன்னாயத்த நிலையத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் அஸ்லாம் பர்வைஸினால் 300,000 டொலர் நிதியுதவி வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத்திடம் வழங்கிவைக்கப்பட்டது.

 இதன்போது பேரனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு நன்கொடை உதவிகளை வழங்கியமைக்கும், தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்தியநிலையத்துடன் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி நாட்டுக்கு அவசியமான தொழில்நுட்ப உதவிகளை வழங்கியமைக்கும் ஆசிய அனர்த்த முன்னாயத்த நிலையத்துக்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர் விஜித்த ஹேரத் தனது நன்றியை வெளிப்படுத்தினார்.

 அதற்குப் பதிலளித்த ஆசிய அனர்த்த முன்னாயத்த நிலையத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் அஸ்லாம் பர்வைஸ், பேரனர்த்தத்தின் பின்னரான இலங்கையின் மீட்சி முயற்சிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்கும், அவசியமான தொழில்நுட்ப உதவிகளைத் தொடர்ந்து பெற்றுக்கொடுப்பதற்கும் தாம் தயாராக இருப்பதாக உறுதியளித்தார்.

 மேலும் தேசிய அனர்த்த முன்னாயத்த நிலை மற்றும் முன்கூட்டிய எச்சரிக்கைக் கட்டமைப்பு என்பவற்றை மேம்படுத்தவேண்டியதன் அவசியம் குறித்தும் இதன்போது இருதரப்பினரும் கலந்துரையாடினர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!