பதுளை மாவட்டத்தில் 238 குடும்பங்கள் வெளியேற்றம்!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 hour ago
பதுளை மாவட்டத்தில் இருந்து 238 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 806 பேர் மண்சரிவு அபாயம் காரணமாக தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் (NBRO) ஆலோசனையின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட செயலாளர் பிரபாத் அபேவர்தன தெரிவித்தார்.
இதற்கமைய பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் பணிகள் நேற்று (10) மேற்கொள்ளப்பட்டதாகவும் பதுளை மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.
பதுளையில் உள்ள 15 பிரதேச செயலகப் பிரிவுகளில், சுமார் 14 பிரிவுகள் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், முன்னர் பாதிக்கப்படாமல் இருந்த ரிதீமாலியத்த பிரிவும் இப்போது பாதிக்கப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட செயலாளர் குறிப்பிட்டார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
