கோட்டாபய ராஜபக்ஷவிற்கு யாழ் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
#SriLanka
#Court Order
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
14 hours ago
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது எதிர்கொள்ளும் கொலை மிரட்டல்கள் குறித்து பிப்ரவரி 6, 2026 க்கு முன்னர் பிரமாணப் பத்திரம் சமர்ப்பிக்க வேண்டும் என்று யாழ்ப்பாண நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.
மரண மிரட்டல்கள் காரணமாக நீதிமன்றங்களில் ஆஜராக முடியவில்லை என்று ராஜபக்ச நீதிமன்றத்தில் தெரிவித்ததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
முன்னணி சோசலிசக் கட்சியின் (FSP) செயற்பாட்டாளர்கள் லலித் குமார் மற்றும் குகன் வீரராஜு ஆகியோர் 14 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட வழக்கு தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்.
இருப்பினும் அவர் முன்னிலையாகாத நிலையில் அவருக்கு கொலை அச்சுறுத்தல்கள் இருப்பதாக கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்தே நீதிமன்றம் மேற்படி உத்தரவு பிறப்பித்துள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
