மண்ணில் புதைந்த குடும்பத்தை காட்டிக் கொடுத்த வளர்ப்பு நாய்!
நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் பல குடும்பங்கள் மண்ணுக்கு இரையாகின.
இந்நிலையில் மாத்தளை, பல்லேபொல, அம்பொக்க பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் உயிரிழந்தனர்.
குறித்த 7 பேரின் சடலங்களைத் தேடுவது மிகவும் கடினமாக இருந்தநிலையில், அவ்வீட்டில் வளர்க்கப்பட்ட நாய், மண்ணுக்குள் புதையுண்டிருந்த வீட்டாரை கண்டுபிடித்துக்கொடுத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த பகுதியில் தற்போதும் மண்சரிவு அபாய நிலை காணப்படுவதால் அங்குள்ள மக்களை அவ்விடத்திலிருந்து வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
நிலச்சரிவுகள் காரணமாக வெளியேறுமாறு அதிகாரிகள் தொடர்ந்து தகவல் வழங்கும் நிலையில், முறையான அறிக்கை அல்லது ஆய்வு இல்லாமல் வீடுகளிலிருந்து வெளியேற கடினமாக உள்ளது என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இந்த விடயம் குறித்து தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் உடனடியாக கவனம் செலுத்தி பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு கிராம மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே, பாடசாலைகள் தொடங்குவதற்கு முன்பு கிராமத்தில் ஏற்பட்டுள்ள பேரிடர் நிலைமை குறித்த அறிக்கையை விரைவில் வழங்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
