பிரித்தானியாவில் நிலவும் சீரற்ற காலநிலை - அம்பர் எச்சரிக்கை விடுப்பு
#Warning
#Climate
#England
#Disaster
Prasu
1 hour ago
பிரித்தானியாவில் சீரற்ற காலநிலை நிலவுவதைத் தொடர்ந்து, அம்பர் எச்சரிக்கை உட்படக் கடுமையான வானிலை முன்னெச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
ஐரிஷ் வானிலை ஆய்வு மையத்தால் பெயரிடப்பட்டுள்ள ‘பிராம்’ (Bram) புயல் இங்கிலாந்தின் வடக்குப் பகுதிக்கு மேற்காக நகர்ந்து, பலத்த மழை மற்றும் கடும் காற்றை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த எச்சரிக்கை முக்கியமாக வடமேற்கு ஸ்காட்லாந்தை உள்ளடக்கியுள்ளது. அத்துடன், புதன்கிழமை வரையிலும் பலத்த காற்றின் தாக்கம் பரவலாக உணரப்படும்.
வடமேற்கு ஸ்காட்லாந்து, தென் வேல்ஸ் மற்றும் தென்மேற்கு இங்கிலாந்து பகுதிகளுக்கு அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
(வீடியோ இங்கே )