மத்திய மலைநாட்டில் வீடுகளை அமைப்பதற்கு கடுமையாகும் சட்டங்கள்!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 hour ago
மத்திய மலைநாட்டில் நிலச்சரிவு ஏற்படக்கூடிய இடங்களில் குடியிருப்புகளை உருவாக்குவது தொடர்பில் கடுமையான சட்டங்களை உருவாக்குவது, அமுல்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கனமழை ஏற்பட்டால் பதுளை மாவட்டத்தின் நிலப்பரப்பில் 50 சதவீதம் வரை நிலச்சரிவு ஏற்படக்கூடிய இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
கணிசமான எண்ணிக்கையிலான மக்கள் தங்கள் அசல் வசிப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட வேண்டியிருக்கும் என்றும் தற்போது நிலச்சரிவு ஏற்பட்ட சில இடங்களில், மனித குடியிருப்புகள் இல்லை என்றும் அவர் கூறினார்.
இனிமேல் ஆபத்தான பகுதிகளில் கட்டிடங்களை நிர்மாணிப்பதில், NBRO ஒப்புதல் கண்டிப்பாக தேவைப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
