ஏன் இந்திய கழிப்பறைகள் சிறந்தவை?
நம்மில் பலர் “மேற்கத்திய கலாச்சாரம்” என்றாலே அது அனைத்திலும் சிறந்தது என்று நம்பிவிடுகிறோம். உணவு, உடை, வீடு—எதையும் பார்த்தாலும் நம் வாழ்க்கை முறைகள் பின்பற்றாமல் மேற்கத்திய பழக்கங்களை வேகமாக ஏற்றுக்கொள்கிறோம். இதேபோல் மேற்கத்திய அமரும் கழிப்பறைகள் (Western Toilets) பலரின் வாழ்க்கையிலும் நுழைந்து விட்டன.
உட்காரும் (Squat) இந்திய கழிப்பறை நல்லதா? இல்லையா நாற்காலி போல அமரும் மேற்கத்திய கழிப்பறை நல்லதா?
இந்திய கழிப்பறைகளே மனித உடற்கூறியல் (Human Anatomy) அடிப்படையில் இயற்கையாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பது என்று உலகமே இன்று ஒப்புக்கொள்கிறது.
கருவில் இருக்கும் குழந்தையின் உடல் நிலையில் பதிலே உள்ளது! ஒரு குழந்தை தாயின் கருவில் இருக்கும் போது அதன் உடல் எப்படிக் குவிந்து இருக்கும் என்பதை பாருங்கள். அது மனித உடலுக்கு மிகவும் இயற்கையான நிலை.
அதே நிலையைப் போலத்தான் நாம் இந்திய கழிப்பறையில் அமர்கிறோம். மேற்கத்திய நாடுகள் கூட இன்று 90° கோணத்தில் அமருவது தவறானது என்றும், 35° கோணம் தான் குடல் இயற்கையாக திறந்து மலத்தை எளிதில் தள்ள உதவும் என்றும் அறிவுறுத்துகின்றன.
இந்திய கழிப்பறையின் அறிவியல் நன்மைகள்
1. உடல் ஆரோக்கியம், நீண்ட ஆயுள்
- இந்திய கழிப்பறையில் அமர்வது ஒரு சிறந்த உடற்பயிற்சி.கால்கள் வலுவாகும், இரத்த ஓட்டம் சீராகும், உடலில் தேங்கி இருக்கும் அழுத்தங்கள் குறையும்.
- “சசாங்காசனம்” என்ற யோகாவின் பயன்களைப் போல் முதுகு மற்றும் இடுப்பு தசைகள் ஓய்வடையும் அடிக்கடி இப்படிச் செய்வது உடலை நன்றாக பராமரிக்க உதவுகிறது.
2. செரிமானம் சரியாகிறது
- இந்திய முறையில் அமரும்போது குடல் இயற்கையாக திறக்கிறது. முழு மலம் வெளியேறும், வயிறு லேசாக இருக்கும், செரிமானம் நன்றாகும்.
- மேற்கத்திய அமர்வு முறையில் முழுமையாக வெளியேறாததால் மலச்சிக்கல், வயிற்று வலி,செரிமானக் கோளாறு, மனஅழுத்தம் என்பவை அதிகரிக்கலாம்.
3. கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானது
- இயற்கையான அமர்வு நிலையில் கருப்பைக்கு அழுத்தம் குறையும்.
- சுவாசம் சீராகும், வயிறு மற்றும் இடுப்பு தசைகள் இயல்பாக இயக்கப்படும்.
- பல ஆய்வுகள் இந்த நிலை சுகப்பிரசவத்திற்கு உதவக்கூடும் என்று கூறுகின்றன.
4. சுற்றுச்சூழலுக்கு மிக நல்லது
- மேற்கத்திய கழிப்பறைகளில் பயன்படுத்தப்படும் Tissue Paperஐ தயாரிக்க வருடத்திற்கு லட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்படுகின்றன. மிக அதிக தண்ணீர் செலவாகிறது. ஆனால் இந்திய கழிப்பறையில் Tissue தேவையில்லை குறைந்த தண்ணீர் போதுமே. இதனால் இயற்கை பாதுகாக்கப்படுகிறது.
5. கேன்சர் உட்பட பல நோய்களைத் தடுக்கிறது
- சரியாக மலம் வெளியேறுவது உடலுக்கு மிகவும் முக்கியம். இந்திய கழிப்பறை அதற்கு சிறந்த உதவி செய்கிறது. இது மலச்சிக்கலைத் தடுக்கிறது.
- குடலின் செயல்பாட்டை சீராக வைத்திருக்கிறது, குடல்வால் அழற்சிக்கு வாய்ப்பு குறைக்கிறது.
- பெருங்குடல் கேன்சர் (Colon Cancer) ஆபத்தை குறைக்க உதவுகிறது.
- மேலும் உடலை முழுமையாக சுத்தப்படுத்துவதால் உடல் நலன் முழுக்க மேம்படுகிறது.
மேற்கத்திய கழிப்பறைகள் உயர்குடி வசதிக்காக மட்டும் உருவானது!!!
- 16ஆம் நூற்றாண்டில் உருவான மேற்கத்திய கழிப்பறைகள் ஆரம்பத்தில் அரச குடும்பம் செல்வந்தர்கள் பயன்படுத்தும் பொருளாக இருந்தது.
- அது “அரியணை” போல அமர்வதால் அவர்கள் அதை செல்வச் சின்னமாகக் கருதினர். ஆனால் இன்று அவர்களே ஆராய்ச்சிகள் செய்து அமர்ந்து மலம் கழிப்பது மனித உடலுக்கு எதிரானது என்பதை உணர்ந்து விட்டனர்.
(வீடியோ இங்கே )