பேரிடர் சூழ்நிலை - ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை!
சமீபத்திய பேரிடர் சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு உடனடி சலுகை நிவாரணத் திட்டத்தை அறிமுகப்படுத்துமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் (CTU) அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
கணிசமான எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நிலுவையில் உள்ள கடன்கள் உட்பட தற்போதைய நிதிச் சுமைகளால் சிரமப்படுவதாகவும் CTU பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
கிட்டத்தட்ட 100,000 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் உறுதிப்படுத்தியுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு 25,000 ரூபாய் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சுரக்ஷா காப்பீட்டுத் திட்டம் தற்போது செயல்பாட்டில் உள்ளது என்றும், மாணவர்களுக்குக் கிடைக்கும் குறிப்பிட்ட சலுகைகள் குறித்த தெளிவு இன்னும் வழங்கப்படவில்லை என்றாலும், அவர்களின் தேவைகளை ஆதரிக்கப் பயன்படுத்தலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
