இலங்கையின் 20 சதவீத நிலப்பரப்பு நீரில் மூழ்கியது - ஐ.நா. அறிக்கை!

#SriLanka #UN
Mayoorikka
4 hours ago
இலங்கையின் 20 சதவீத நிலப்பரப்பு நீரில் மூழ்கியது - ஐ.நா. அறிக்கை!

25 மாவட்டங்களை பாதிக்கும் வகையில் இலங்கையை தாக்கிய ‘டித்வா’ புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஏற்பட்ட சேதங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் (UNDP) புதிய அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.  

 அதற்கமைய, அவர்களது புதிய புவியியல் பகுப்பாய்வின்படி, புயலால் ஏற்பட்ட வெள்ள நீர் 1.1 மில்லியன் ஹெக்டேயருக்கும் அதிகமான நிலப்பரப்பை பாதித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.  

 இதன்படி நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 20 சதவீதம் அல்லது ஐந்தில் ஒரு பங்கு நீரால் மூழ்கியுள்ளதுடன், வீடுகள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு குறிப்பிடத்தக்க சேதங்கள் ஏற்பட்டுள்ளமையும் இதில் தெரியவந்துள்ளது.   

 இதற்கிடையில் 'டித்வா' சூறாவளி காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 2.3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் அரைவாசிக்கு மேற்பட்டோர் பெண்கள் எனவும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் தெரிவித்துள்ளது. ‎ 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!