திருகோணமலையில் 8000இற்கும் மேற்பட்ட ஏக்கர் வயல் நிலங்கள் முற்றாகச் சேதம்!

#SriLanka
Mayoorikka
1 hour ago
திருகோணமலையில் 8000இற்கும் மேற்பட்ட ஏக்கர் வயல் நிலங்கள் முற்றாகச் சேதம்!

கந்தளாய் குளத்தின் பத்து வான்கதவுகள் திறக்கப்பட்டதால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால், அப்பகுதியிலுள்ள 8000 மேற்பட்ட ஏக்கர் வயல் நிலங்கள் முற்றாகச் சேதமடைந்துள்ளன. 

 பரட்டைக்காடு, செட்டிக்காடு, தம்பலகாமம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள, பத்து நாட்கள் மட்டுமே ஆன நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி அழிந்துவிட்டன.

 வெள்ளம் வடிந்த பின் வயல் நிலங்கள் முழுவதும் மணலும் சேறும் படிந்துள்ளதால், விவசாயிகள் தாம் பெரும் நட்டத்தை எதிர்கொண்டுள்ளதாகக் கவலை தெரிவிக்கின்றனர். 

 இந்தச் சேதம் அடுத்த போக விவசாய நடவடிக்கைகளையும் பாதிக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு மற்றும் நிவாரணங்களை வழங்குவதுடன், வயல் நிலங்களைச் சீரமைக்க நீர்ப்பாசனத் திணைக்களம், விவசாய அமைச்சகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகியன விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை