நிவாரண பொருட்களை சரியான முறையில் விநியோகிப்பதற்காக குழுவொன்று நியமனம்!
பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் நிவாரண பொருட்களை ஒருங்கிணைப்பதற்கும், அவற்றை சரியான முறையில் விநியோகிப்பதை உறுதிப்படுத்துவதற்காகவும் தேசிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
பேரிடர் மேலாண்மை மையத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருணா ஜெயசேகர, வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் உதவி மற்றும் உபகரணங்களை பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு திறம்பட நிர்வகித்து விநியோகிப்பதற்கு இந்தக் குழு பொறுப்பாகும் என்று கூறினார்.
இந்தக் குழுவின் மூலம் நன்கொடைகள் சரியான இடத்திற்கு வழங்கப்பட வேண்டும். ஒரு அரசாங்கமாக, அவை முறையாகப் பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்து, விநியோகம் எவ்வாறு செய்யப்படுகிறது என்பதைத் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும், ஒவ்வொரு நபருக்கும் ஒரு முறை மட்டுமே உதவி கிடைக்கும்" என்று அவர் கூறினார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
