இலங்கைக்கு முதற்கட்டமாக 4.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கும் ஐ.நா!
#SriLanka
#UN
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 hour ago
சமீபத்திய கடுமையான வானிலை பேரழிவைத் தொடர்ந்து மீட்பு மற்றும் மறுகட்டமைப்பு நடவடிக்கைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை முழு ஆதரவையும் வழங்கும் என இலங்கைக்கான ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரூ இன்று தெரிவித்துள்ளார்.
வெளியுறவு அமைச்சர் விஜித ஹெராத்துடனான சந்திப்பின் போது அவர் இந்த உறுதிமொழியை வழங்கினார்.
அத்துடன் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உடனடி நிவாரணத்தை ஆதரிப்பதற்காக ஐ.நா. தனது அவசரகால மீட்பு நிதியத்தின் கீழ் முதற்கட்டமாக 4.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
இதேவேளை தேவைகள் குறித்த விரிவான மதிப்பீட்டை நடத்துவதற்காக ஐ.நா. மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் (OCHA) ஐந்து பேர் கொண்ட குழு ஏற்கனவே இலங்கைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
