பேரிடர் சூழல் - பலி எண்ணிக்கை 627 ஆக உயர்வு!
நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்த பேரிடர் நிலைமை காரணமாக ஏற்பட்ட அனர்த்த மரணங்களின் எண்ணிக்கை 627 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இன்று (07) நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்ட சமீபத்திய அறிவிப்பின்படி, 190 பேர் காணாமல்போயுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. 611,530 குடும்பங்களைச் சேர்ந்த 2,179,138 பேர் பாதகமான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கண்டி மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் நுவரெலியா மாவட்டத்தில் 89 இறப்புகளும், பதுளை மாவட்டத்தில் 90 இறப்புகளும், குருநாகல மாவட்டத்தில் 61 இறப்புகளும், கேகாலை மாவட்டத்தில் 32 இறப்புகளும், புத்தளத்தில் 35 இறப்புகளும், மாத்தளை மாவட்டத்தில் 28 இறப்புகளும் பதிவாகியுள்ளன.
27,663 குடும்பங்களைச் சேர்ந்த 89,857 பேர் இன்னும் தங்குமிடங்களில் தங்கியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
