அத்தியாவசிய சேவைகளை அணுகுவதில் ஏற்படும் சிரமங்கள் - தொலைபேசி இலக்கம் அறிமுகம்!
நாடு முழுவதும் அத்தியாவசிய சேவைகளை அணுகுவதில் உள்ள சிரமங்கள் தொடர்பில் முறைப்பாடு அளிக்க 1904 என்ற ஹாட்லைன் தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகள் ஆணையர் அலுவலகம் இந்த ஹாட்லைனை அறிமுகப்படுத்தியுள்ளது.
மின்சாரம், மருத்துவமனைகள் மற்றும் அவசர மருத்துவ சேவைகள், பொது போக்குவரத்து மற்றும் விநியோகங்கள், நீர் வழங்கல் மற்றும் சுகாதாரம், உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள், தொலைத்தொடர்பு மற்றும் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப சேவைகள், நீர்ப்பாசனம் மற்றும் பிற அத்தியாவசிய பொது சேவைகள் தொடர்பான சிக்கல்களை இதன் ஊடாக தெரியப்படுத்தலாம்.
அவசரநிலைகள் அல்லது சேவை இடையூறுகள் ஏற்பட்டால் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் முறைப்பாடுகளுக்கு சரியான நேரத்தில் பதிலளிப்பது, சிறந்த ஒருங்கிணைப்பு மற்றும் திறமையான தீர்வை உறுதி செய்வதற்காக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
