நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் 269 சுற்றுலாப் பயணிகள் பாதிப்பு!
#SriLanka
Mayoorikka
1 hour ago
நாட்டில் டித்வா சூறாவளியால் 269 சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில், டித்வா சூறாவளியால் இந்தியர்களும் (52) பல்கேரியர்களும் (40) அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகள் மீட்கப்பட்டு அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.
சுற்றுலாத் தலங்கள் திறக்கப்பட்டு, சேவைகள் மீட்டெடுக்கப்பட்டு, சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் வருகை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் இலங்கை மீண்டெழுந்து வளர்ச்சியை நோக்கிய தனது பயணத்தைத் ஆரம்பிக்கத் தயாராக உள்ளது எனக் குறிப்பிட்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
