உலகின் மிகப்பெரிய விமானத்தில் நிவாரணப் பொருட்களை அனுப்பியது ஐக்கிய அரபு அமீரகம்!
இயற்கை அனர்த்த நிலையில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் பெருந்தொகை நிவாரணப் பொருட்களை எடுத்துக்கொண்டு ஐக்கிய அரபு அமீரகம் அனுப்பி வைத்த விமானம் இன்று (02) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தை நிலையத்தை வந்தடைந்தது.
குறித்த விமானத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் 48 தற்காலிக கூடாரங்கள், ஒரு குடும்பத்திற்குப் 14 நாட்களுக்கு போதுமான 2,592 உணவு பொதிகள், கூடாரங்கள், மீட்பு படையினருக்கான உபகரணங்கள், கடினமான பாதைகளில் செலுத்தக்கூடிய மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட பெருமளவு நிவாரணப் பொருட்கள் அடங்கியிருந்தன.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் விமானப்படைக்கு சொந்தமான, உலகின் மிகப் பெரிய சரக்கு கொண்டு செல்லும் விமானங்களில் ஒன்றாகக் கருதப்படும் C-17 வகை விமானம், அபுதாபி நகரிலிருந்து இந்த நிவாரண சரக்குகளை ஏற்றி இலங்கைக்கு வந்தது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
