இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு இந்தியா தொடர்ந்து துணை நிற்கும்: மோடி உறுதி

#SriLanka
Mayoorikka
1 hour ago
இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு இந்தியா தொடர்ந்து துணை நிற்கும்: மோடி உறுதி

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு, 'டிட்வா' சூறாவளியால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் பாரிய அழிவுகள் குறித்து தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

 நெருக்கமான மற்றும் நம்பிக்கைக்குரிய நண்பனாக, இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கும் அதன் மக்களுக்கும் இந்தியா வலுவான ஆதரவை வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 தற்போது அமுலில் உள்ள 'சாகர் பந்து' நடவடிக்கை மூலம், நிவாரணப் பணிகளுக்கும் மீட்பு முயற்சிகளுக்கும் தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் இந்தியா தொடர்ந்து வழங்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

 அத்துடன், இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும், இயல்பு நிலைக்குத் திரும்பும் முயற்சிக்கும், எதிர்வரும் நாட்களில் இந்தியா இலங்கையுடன் தொடர்ந்து துணை நிற்கும் என்றும் இந்திய பிரதமர் உறுதியளித்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை