கல்வி அமைச்சு மற்றும் அரச கல்வி அதிகாரிகளுக்கான வேண்டுகோள்! சோதிடர் சுதாகர்
இலங்கையில் பொதுவாக கார்த்திகை மார்கழி ( November, Desember) ஒழுங்கற்ற காலநிலை கடும்மழை என்பது யாவரும் அறிந்த உண்மை ஆனால் அப்படி இருந்தும் இந்த இரண்டு மாதங்களிலே முக்கியமான நிகழ்வுகள் நடப்பதும் பாடசாலை விடுமுறை விடுவதும் அதேவேளை தேர்வு அல்லது பரீட்சையை நடத்துவதும் எந்த விதத்திலும் சிறப்பாக அமையாது.
இது மாணவர்களுக்கு பெரும் இடையூறாகவும் அதே நேரத்தில் பரீட்சை நடத்துவதற்கும் இடையூறாக அமைகிறது.
ஆகவே இந்த இரண்டு மாதங்களையும் தவிர்த்து ( January 15 )தை மாதம் 15 ஆம் தேதி முதல் அல்லது அதற்குப் பிந்திய காலத்தில் இந்தப் பரீட்சைகளை நடத்தினால் சிறப்பாக இருக்கும் அந்தக் காலத்தில் விடுமுறை என்பது பொதுவாகவே நாட்டில் பல பாகங்களில் அறுவடை காலமாகவும் அமைகின்ற படியால் இது மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அதேவேளை ஆசிரியர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
இதைப் போன்றே இலங்கையர் தினத்தை இப்படி மார்கழி மாதத்தில் நடாத்துவதும் அவ்வளவு பொருத்தமானதாக அமையாது இதையும் ஆடி ஆவணி மாதங்களில் அல்லது தை மாசி மாதங்களில் நடத்துவதே சிறப்பு.
ஒருவேளை பாடசாலை விடுமுறை காலத்திலேயே இந்த விழா இடம் பெறுமானால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து.
தயவுசெய்து முடிந்தவர்கள் அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லவும், சொல்லவும்.
இந்தச் செய்தியின் பிரதிகள் @exams@doenets.lk, @info@moe.gov.lk, மற்றும் lanka4@lanka4.com ஆகிய மின்அஞ்சல் முகவரிகளுக்கு பிரத்தியேகமாக அனுப்பப்பட்டுள்ளது.
-சோதிடர் சுதாகர்-
(வீடியோ இங்கே )
அனுசரணை
