யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் உயிர்நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி!

#SriLanka
Mayoorikka
1 hour ago
யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் உயிர்நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி!

மாவீரர் நாளை முன்னிட்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் உயிர்நீத்த மாவீரர்களுக்கு சுடர் ஏற்றி மலர் தூவி இன்று (27) அஞ்சலி செலுத்தினார்.

 முன்னதாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் மாவீரர் சங்கருக்கு கம்பர்மலையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலி செலுத்தினார்.

 தொடர்ந்து குட்டிமணி மற்றும் தங்கத்துரை ஆகியோருக்கும் அஞ்சலி செலுத்தினார். பின்னர், நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபியிலும், மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு அமைந்துள்ள நினைவாலயத்திலும் சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

 தொடர்ந்து கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் இராணுவத்தின் படைமுகாம் அமைக்கப்பட்டுள்ளதால் இராணுவ முகாமுக்கு முன்பாக அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனையடுத்து, தமிழின விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த தியாகி பொன் சிவகுமாரனின் உரும்பிராயில் உள்ள நினைவுத் தூபிக்கும் சென்று அஞ்சலி செலுத்தினர்.

images/content-image/1764237798.jpg

 தொடர்ந்து சாவகச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவிடத்திலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இராணுவத்தின் படைமுகாம் அமைக்கப்பட்டுள்ளதால் இராணுவ முகாமுக்கு முன்பாக அஞ்சலி செலுத்தப்பட்டது.

 அதனை தொடர்ந்து, மாவீரர் மில்லரின் நினைவாக நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தின் முன்பாக ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

 எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் இராணுவத்தின் படைமுகாம் அமைக்கப்பட்டுள்ளதால் இராணுவ முகாம் முன்பாக அஞ்சலி செலுத்தப்பட்டது. வல்வெட்டித்துறை கடற்கரையில் கடலில் காவியமான கடற்புலிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை