பண்டிகைக் காலத்தில் காய்கறிகளின் விலைகள் அதிகரிக்கக்கூடும்!
இலங்கை முழுவதும் பெய்த கனமழையால் சுமார் 600,000 ஏக்கர் நெல் மற்றும் காய்கறி பயிர்கள் நாசமாகியுள்ளன, இதனால் பண்டிகைக் காலத்தில் காய்கறி பற்றாக்குறை மற்றும் விலை உயர்வு ஏற்படும் என்ற கவலை எழுந்துள்ளதாக தேசிய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அனுராதா தென்னக்கோன் எச்சரித்தார்.
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த தென்னக்கோன், கிழக்கு மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நெல் மற்றும் பிற உணவுப் பயிர்கள் மோசமாக சேதமடைந்துள்ளதாகவும், நுவரெலியா மற்றும் பதுளையில் காய்கறி பயிர்களும் குறிப்பிடத்தக்க இழப்பைச் சந்தித்துள்ளதாகவும் கூறினார்.
கனமழையால் ஏற்பட்ட பயிர் சேதத்திற்கான மாவட்ட அளவிலான புள்ளிவிவரங்களை அவர் வழங்கியுள்ளார். இதன்படி,
மட்டக்களப்பு: 25,500 ஹெக்டேர்
அம்பாறை: 33,000 ஹெக்டேர்
திருகோணமலை: 23,000 ஹெக்டேர்
குருநேகலா: 15,000 ஹெக்டேர்
அனுராதபுரம்: 4,000 ஹெக்டேர்
பொலன்னறுவை: 5,000 ஹெக்டேர்
மொனராகலா: 55,000 ஹெக்டேர்
காய்கறிகளைப் பொறுத்தவரை,
நுவரஎலியா: 18,000 ஹெக்டேர்
பதுளை: 9,000 ஹெக்டேர்
மீட்பு நடவடிக்கைகள் விரைவாக செயல்படுத்தப்படாவிட்டால், வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் விலை உயர்வுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
