பாராளுமன்றம் என்றால் என்ன? முதல் போய் படியுங்கோ: அர்ச்சுனாவை வெளுத்து வாங்கிய அருண் சித்தாத்
இலங்கையில் நீண்டகால உள்நாட்டு மோதலுக்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக அடையாளப்படுத்தப்படும் “தரப்படுத்தல்” குறித்து யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூனா இராமநாதன் வெளிப்படுத்திய கருத்துகள் அவரது ஆழமான அறிவீனத்தையும் மேலாதிக்க உயர் சாதிய மனோபாவத்தையும் வெளிப்படுத்துவதாக சர்வஜன அதிகாரம் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் அருண் சித்தார்த் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் அவர் கூறியதாவது: 1971–72 தரப்படுத்தல் கொள்கையின் பின்னணி 1971 ஆம் ஆண்டு பிரதமர் சிறிமா பண்டாரநாயக்க ஆட்சி “Media-wise standardisation” அல்லது “Language-based standardisation” என்ற முறையை அறிமுகப்படுத்தியது.
இதன் மூலம் பல்கலைக்கழக உயர் கல்வி சேர்க்கை வெட்டுப்புள்ளிகளில் தமிழ் மொழி மூலமான மாணவர்களுக்கு சிங்கள மாணவர்களை விட அதிக புள்ளிகள் பெற வேண்டிய நிலை உருவாக்கப்பட்டது. ஆங்கிலத்தில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் கூட பிறிதொரு தரநிலை இல்லாமல், இன அடிப்படையிலேயே மேலே குறிப்பிட்ட வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் தான் பல்கலைக்கழக அனுமதி வழங்கப்பட்டது.
District Quota System (1972) அரசின் இந்த தரப்படுத்தல் ஒரு ஆண்டுக்குள் மாற்றப்பட்டு 1972 இல் District Quota System அமல்படுத்தப்பட்டது. இந்த District quota system தான் காலத்துக்குகாலம் மெருகூட்டப்பட்டு இன்றைய Z score ஆகப் பரிணமித்துள்ளது. District quota வினால் தான் ; • 1974 இல் முதலாவது மாணவர் கிளிநொச்சியில் இருந்து பல்கலைக்கழகச் சேர்க்கை பெற்றார்.
• வன்னி, மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை போன்ற பின்னடைந்த தமிழ் மாவட்டங்களில் மாணவர்கள் உயர் கல்வி வாய்ப்பைப் பெறத் தொடங்கினர். வரலாற்றுச் சூழல் 1956 ஆம் ஆண்டு “Sinhala Only Act” வரும்வரை இலங்கையின் உத்தியோகபூர்வ மொழி ஆங்கிலமாக இருந்தது.
யாழ்ப்பாணத்தில் 1800-களிலிருந்தே செயல்பட்ட கிறிஸ்தவ மிஷனரி பாடசாலைகளின் காரணமாக, அந்தப் பகுதிகளில் உயர்சாதி வெள்ளாளியர் வர்க்கமே பல்கலைக்கழக வாய்ப்புகளை அதிகம் பெற்றனர். அதே சமூகமே ஒல்லாந்து ஆட்சியுடன் இணைந்து உருவாக்கிய தேச வழமைச் சட்டம் 8ஆம் பிரிவின் மூலம் நான்கு சாதிகளை அடிமைப்பட்ட நிலைக்குத் தள்ளி கல்வி, நில உரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை மறுத்தது என அருண் சித்தார்த் குறிப்பிட்டார்.
“இன்றோ அதே உயர்வர்க்க வெள்ளாளியர்கள் ‘தரப்படுத்தலால் எங்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது’ என கதறுவது வரலாற்றை மறுக்கும் முயற்சியே,” என்று அவர் தெரிவித்தார். போதைப்பொருள் வர்த்தக குற்றச்சாட்டுகள் மேலும், புலிகள் (LTTE) போதைப்பொருள் கடத்தலில் பெருமளவில் ஈடுபட்டதற்கான பல சர்வதேச ஆதாரங்கள் உள்ளன என்றார்.
கனடாவைத் தளமாகக் கொண்ட Mackenzie institute எனப்படும் non profit research group , கனடிய புலனாய்வு மற்றும் பாதுகாப்பு சேவைகள், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் ,
ஐக்கியநாடுகள் சபையின் UNODC United Nations office on Drug and Crime மற்றும் DBS ஜெயராஜ் போன்றவர்களின் அறிக்கைகள் பிரபாகரன் தலைமையிலான புலிப்படை போதைப் பொருள் வர்த்தகத்தை முன்னெடுத்தது என உறுதிப்படுத்தியுள்ளனர் என அவர் கூறினார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
