சுமார் 123 ஆண்டுகள் பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க பெந்தோட்டை பாலம் இடிந்து விழுந்தது!

#SriLanka
Mayoorikka
1 hour ago
சுமார் 123 ஆண்டுகள் பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க பெந்தோட்டை பாலம் இடிந்து விழுந்தது!

சீரற்ற வானிலையின் தாக்கத்தால் 1902ஆம் ஆண்டு கட்டப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பெந்தோட்டை பழைய பாலம் இடிந்து வீழ்ந்துள்ளது.

 தீவிரமான மழைப்பொழிவு, பலத்த காற்று மற்றும் ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்ததன் விளைவாக, இந்த பழமையான பாலத்தின் பகுதி சரிந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

 சுமார் 123 ஆண்டுகளாக பெந்தோட்டை பகுதியை இணைத்து வந்த இந்த பாலம், இலங்கையின் முக்கிய வரலாற்று பொக்கிஷங்களில் ஒன்றாகக் கருதப்பட்டது.

images/content-image/1764219897.jpg

 காலநிலை மேலும் மோசமடையக் கூடும் என்பதால், குறித்த பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் எனவும், போக்குவரத்து மாற்று பாதைகளுக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

images/content-image/1764220141.jpg

 பாதுகாப்பு பணிகள் மற்றும் மதிப்பீடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை