இலங்கையில் நங்கூரமிட்டுள்ள பல வெளிநாட்டு போர்க் கப்பல்கள்!
இலங்கை கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவைக் முன்னிட்டு, பிராந்திய மற்றும் உலகளாவிய நாடுகளைச் சேர்ந்த ஏழு போர்க்கப்பல்களின் பங்கேற்புடன், எதிர்வரும் 30 ஆம் திகதி காலி முகத்திடலில் நடைபெறவுள்ள, 2025ஆம் ஆண்டுக்கான சர்வதேச போர் கப்பல்கள் கண்காணிப்பில் பங்கேற்க, பங்களாதேஷ் மற்றும் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று (03) போர்க்கப்பல்கள் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் நாட்டை வந்தடைந்துள்ளன.
கொழும்பு துறைமுகத்தில் கடற்படை மரபுகளின்படி போர்க்கப்பல்களை இலங்கை கடற்படை வரவேற்றுள்ளது. நாட்டை வந்தடைந்துள்ள பங்களாதேஷ் கடற்படையின் போர்க்கப்பலான ‘PROTTOY’ 90.1 மீற்றர் நீளம் கொண்டதுடன், அதன் கட்டளை அதிகாரியாக CAPTAIN MD TOUHIDUL HAQUE BHUIYAN கடமையாற்றுகின்றார்.

2025ஆம் ஆண்டுக்கான சர்வதேச போர்க்கப்பல்கள் கண்காணிப்பில் இரண்டு இந்திய கடற்படை போர்க்கப்பல்கள் பங்கேற்கின்றது. அதன்படி, நாட்டை வந்தடைந்துள்ள இந்திய கடற்படையின் விமானம் தாங்கி கப்பலான INS VIKRANT 262.5 மீற்றர் நீளம் கொண்டது அதன் கட்டளை அதிகாரியாக captain Ashok Rao கடமையாற்றுகின்றார்.

மேலும், 2025ஆம் ஆண்டுக்கான சர்வதேச போர்க்கப்பல்கள் கண்காணிப்புடன் இணைந்து, கடற்படைகளுக்கு இடையே பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கை கடற்படை பல திட்டங்களை ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி, இந்த போர்க்கப்பல்களின் குழுவினர்களில் பங்கேற்புடன் எதிர்வரும் 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் கடற்கரை சுத்தம் செய்யும் திட்டம், விளையாட்டு திட்டம், சர்வதேச உணவு கண்காட்சி, சர்வதேச இசைக்குழு நிகழ்ச்சி மற்றும் நகர அணிவகுப்பு ஆகியவை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
