ஜேவிபி கட்சியும் ஒரு இனவாத கட்சி சபையில் சீறிய கஜேந்திரகுமார் (வீடியோ இணைப்பு)
தேசியத்தலைவர் மேதகு. பிரபாகரனின் தலைமைத்துவத்தில் இடம்பெற்று கொண்டிருந்த விடுதலைப் போராட்டத்தை அழிப்பதற்கும்,இன அழிப்பிற்கும் தத்துவார்த்த ரீதியாக, தத்துவாசிரியர்களாகவும் மக்கள் விடுதலை முன்னணியினர் செயற்பட்டனர்.
தமிழ் தேச விரோத கொள்கைகளைக் கொண்ட இவர்கள் தற்போது தேசியத் தலைவரையும், மாவீரர்களையும் பற்றி பேசிக்கொண்டு வடக்கு மற்றும் கிழக்குக்குள் காலூன்ற முயற்சிக்கிறார்கள்.இதன் பிரதான செயற்பாட்டாளராக கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் செயற்படுகிறார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (26) நடைபெற்ற 2026 வரவு - செலவுத் திட்டத்தின் கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு மற்றும் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு,டிஜிட்டல் பொருளாதார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது
தேசியத்தலைவரின் தலைமைத்துவத்தில் நடந்து கொண்டிருந்த விடுதலைப் போராட்டத்தை அழிப்பதற்கும் , இன அழிப்பிற்கும் தத்துவார்த்த ரீதியாக இதத்துவாசிரியர்களாக இருந்தவர்கள்தான் இந்த ஜே .வி.பி.யினர். தமிழ் தேச விரோத கொள்கைகளைக் கொண்ட இந்த நபர்கள் இன்று தேசியத் தலைவரையும் அவருடைய மாவீரர்களையும் ஏதோவொரு வகையில் கதைத்து,பேசி.தூக்கிப்பிடித்துக்கொண்டு வடக்கு- கிழக்கிற்குள் காலூன்ற முயற்சிக்கின்றனர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி. யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
ஈழத்தமிழ் தேசத்தினுடைய தேசியத்தலைவர் மட்டுமல்ல உலகத்த தமிழருடைய தலைவருமான பிரபாகரனின் 71 ஆவது பிறந்த தினம் இன்று.தேசியத்தலைவரின் போராட்டத்தை 2009 ஆம் ஆண்டுக்கு முன்னரும் அதற்கு பின்னரும் மிக மோசமாக விமர்சித்து கேவலபடுத்திய தரப்புக்களில் இன்று ஆட்சியில் அமர்ந்திருக்கக் பிரதான தரப்பினராக மக்கள் விடுதலை முன்னணி காணப்படுகிறது. மஹிந்த ராஜபக்ச தரப்பு இனவாதம் பேசியபோது தமிழினத்திற்கு எதிராக, தேசியத்தலைவரின் தலைமைத்துவத்தில் இடம்பெற்றுக் கொண்டிருந்த விடுதலைப் போராட்டத்தை அழிப்பதற்கு,இன அழிப்பிற்கு தத்துவார்த்த ரீதியாக, தத்துவாசிரியர்களாக இருந்தவர்கள்தான் இந்த மக்கள் விடுதலை முன்னணியினர்.
தேசியத்தலைவரின் தலைமைத்துவத்தின் கீழ் இயங்கிய போராளிகளுக்கு வட மற்றும் கிழக்கில் அஞ்சலி செலுத்துவதற்கும் மாவீரர் துயிலும் இல்லங்களை விடுவிப்பதற்கும் தாங்கள் நடவடிக்கை எடுக்கப்போவதாக வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்களுக்கு காட்டிக்கொண்டு தெற்கிலே அதற்கு நேர்மாறான கருத்துக்களைத் தெரிவித்துக்கொண்டிருக்கும் ஒரு சூழலே இன்று காணப்படுகிறது.
இதில் பிரதானமாக செயற்படும் நபராக கடற்தொழில் அமைச்சர் உள்ளார். தியாக தீபம் திலீபனின் நினைவு நிகழ்விற்கு அவர் நேரடியாக சென்றிருந்தார். மக்கள் விடுதலை போன்ற தமிழ் தேச விரோத கொள்கைகளைக்கொண்ட நபர்கள் இன்று தேசியத்தலைவரின் போராட்டம் மௌனிக்கப்பட்டதற்கு பின்னர் அதே தேசியத் தலைவரையும் அவருடைய மாவீரர்களையும் ஏதோவொரு வகையில் கதைத்து,பேசி,தூக்கிப்பிடிக்கின்றனர் ஏனெனில் தேசியத் தலைவரையும் அவருடைய மாவீரர்களையும் பற்றிபேசாது வடக்குஇகிழக்கிற்குள் நுழைய முடியாது. அப்படியானால் எந்தளவு தூரத்திற்கு தமிழ் தேச விரோத தத்துவங்களைக்கொண்ட தரப்புகள் தோல்வியடைந்துள்ளன என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும் என்றார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
