அனைத்து ரயில் சேவைகளும் பாதிப்பு!
#SriLanka
Thamilini
3 hours ago
மோசமான வானிலை காரணமாக அனைத்து ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரங்கள் விழுந்ததால் கரையோர ரயில் பாதை மற்றும் களனி பள்ளத்தாக்கு ரயில் பாதையின் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், வெல்லவ பகுதியிலிருந்து வடக்கு ரயில் பாதை நீரில் மூழ்கியுள்ளது, இதனால் அந்தப் பாதையிலும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும் புத்தளம் பாதை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
மேலும், மோசமான வானிலை காரணமாக, கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையிலான மலையக ரயில் பாதையில் இயங்கும் அனைத்து ரயில்களும் மறு அறிவிப்பு வரும் வரை நானுஓயா வரை மட்டுமே இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே துறை மேலும் தெரிவித்துள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
