மட்டக்களப்பில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை: பல வான் கதவுகள் திறப்பு

#SriLanka
Mayoorikka
20 hours ago
மட்டக்களப்பில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை: பல வான் கதவுகள் திறப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதுடன் சில இடங்களில் போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்டள்ளன.

 இன்று காலையில் காற்றுடனான கடும் மழைபெய்துவரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சில பிரதான குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

images/content-image/1764145623.jpg

 முட்டக்களப்பு மாவட்டத்தின் நவகிரிகுளத்தின் வான்கதவு இரண்டு அடிகள் திறக்கப்பட்டுள்ளதன் காரணமாக போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

images/content-image/1764145633.jpg

 மட்டக்களப்பு- மண்டூர் பிரதான வீதி, பாலையடிவட்டை வெல்லாவெளி வீதி ஆகியவற்றின் ஊடாக இரண்டு அடிக்கும் மேல் வெள்ள நீர் பாய்வதனால் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதேபோன்று பொறுகாமம் ஊடாக பிரதேதேசபைக்கு இடைப்பட்ட பிரதான வீதி ஊடாக நீர் பாய்வதன் காரணமாக சிரமங்களுக்கு மத்தியில் மக்கள் பயனங்களை முன்னெடுத்துவருகின்றனர்.

images/content-image/1764145650.jpg

 இதேநேரம் கா.பொ.த.உயர்தர பரீட்சைகள் நடைபெற்றுவரும் நிலையில் இன்றைய தினம் பரீட்சை மண்டபங்களுக்கு செல்வதற்கு மாணவர்கள் பல்வேறு கஸ்டங்களை எதிர்நோக்கியதை காணமுடிந்தது. தூழ்நிலங்களில் உள்ள வயல்நிலங்கள் முற்றாக வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் விவசாயிகள் கடும் கவலை தெரிவித்துள்ளனர்.

 இதேநேரம் காற்றுடன் கூடிய மழையுடன் கூடிய காலநிலை நிலவுவதன் காரணமாக அவதானமாக செயற்படுமாறு மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வலியுறுத்தியுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை