ஒரேநாளில் 225 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவு - அம்பாறையின் பல பகுதிகளில் வெள்ளம்!
#SriLanka
#Flood
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
20 hours ago
அம்பாறையில் நேற்று மாத்திரம் 225 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கல்ஓயா ஆற்றுப் படுகையின் கீழ் பகுதியில் லேசான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது.
அம்பாறை, இங்கினியாகலவில் உள்ள சேனநாயக்க சமுத்திரத்தின் நீர் கொள்ளளவு தற்போது அதன் அதிகபட்ச நீர் கொள்ளளவை எட்டியுள்ளது, மேலும் சேனநாயக்க சமுத்திரத்தின் கீழ் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அம்பாறை, எரகம, அட்டாலச்சேனை, சம்மாந்துறை, நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனை, நாவிதன்வெளி மற்றும் ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக வளாகம் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
