மாவீரர் தினம்: யாழில் கடைகளை இரண்டு மணியுடன் மூட கோரிக்கை
#SriLanka
Mayoorikka
21 hours ago
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். மாநகரசபை உறுப்பினர்களுக்கும், யாழ். வணிகர் கழக பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றது.
எமது மண்ணுக்காய் மரணித்த மாவீரர் தினமான நாளை, யாழில் உள்ள வர்த்தக நிலையங்களை மாலை 2.00 மணியுடன் பூட்டி உரிமையாளர், ஊழியர்கள் மாவீரர் நிகழ்வில் பங்குபற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு நேரில் சந்தித்து எழுத்துமூலமாக கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அவர்கள் அது குறித்து சாதகமாக பரிசீலிப்பதாக வாக்குறுதி தந்திருப்பதாக யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர் இரத்தினம் சதீஸ் தெரிவித்துள்ளார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
