பிரான்சில் இருந்து சீனாவுக்கு திருப்பி அனுப்பப்படும் 2 பாண்டாக்கள்
#China
#France
#government
#Zoo
#Animal
Prasu
2 hours ago
மத்திய பிரான்சில் உள்ள ஒரு மிருகக்காட்சிசாலையில் உள்ள இரண்டு பாண்டாக்கள் சீனாவுக்குத் திருப்பி அனுப்பப்படவுள்ளது.
கருப்பு-வெள்ளை கரடிகளை உலகம் முழுவதும் மென்மையான-சக்தி தூதர்களாக அனுப்பும் சீனாவின் "பாண்டா ராஜதந்திர" திட்டத்தின் ஒரு பகுதியாக ஹுவான் ஹுவானும், யுவான் ஜியும் 2012ல் பிரான்சில் உள்ள பியூவல் மிருகக்காட்சிசாலைக்கு வந்தனர்.
17 வயதான இரண்டு பாண்டாக்களும் ஜனவரி 2027 வரை பிரான்சில் தங்கியிருக்க திட்டமிடப்பட்டன, ஆனால் சீனாவுக்குத் திருப்பி அனுப்பப்படவுள்ளது.
நாளை ஹுவான் ஹுவான் மற்றும் யுவான் ஜி ஆகியோர் பலத்த போலீஸ் பாதுகாப்பின் கீழ் பாரிஸ்-சார்லஸ் டி கோல் விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.
(வீடியோ இங்கே )