அனுரகுமார திசாநாயக்க தொடர்பில் சுவாரஷ்யமான பத்து தகவல்கள்!

#SriLanka #Sri Lanka President #AnuraKumaraDissanayake
Mayoorikka
5 hours ago
அனுரகுமார திசாநாயக்க தொடர்பில் சுவாரஷ்யமான பத்து தகவல்கள்!

இலங்கையின் வரலாற்றில் மிக நீண்ட போராட்டத்திற்கு பின்னர் ஒரு மாக்சிஸ கட்சியின் தலைவர் ஜனாதியாதியாக வந்தமை இதுவே முதல் தடவையாகும். 

அவர் தான் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க. இவர் ஒரு மாக்சிஸ கொள்கைவாதியாகவும், மிகவும் கம்பீரமான தோற்றப்பாடு உடையவராகவும் விளங்குகின்றார்.

 இலங்கையை பொருளாதார ரீதியாகவும், போதையற்ற சமூகமாகவும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கு போராடிக் கொண்டிருக்கும் ஒரு தலைவர்.

 ஆம் லங்கா4 ஊடகம் வாயிலாக இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட 9 ஆவது ஜனாதிபதியாகிய, 


அனுரகுமார திசாநாயக்க தொடர்பில் பத்து தகவல்களை தெரிந்துகொள்வோம்,

  •  இலங்கையில் புரட்சியின் நாயகன் என வர்ணிக்கப்படுவர் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இவர் 1968 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் தேதி இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள தம்புதேகம கிராமத்தில் பிறந்தார்.
  •  முதன்முதல் 2014 பெப்ரவரி 2 இல் இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் 7வது தேசிய மாநாட்டில் இவர் அக்கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 
  •  அனுர குமார திஸாநாயக்க பொதுவாக ஏகேடி என்று இலங்கை அரசியலில் அழைக்கப்படுகிறார்.
  •  அனுர குமார தனது பள்ளிப் பருவத்திலிருந்தே ஜே.வி.பி. கட்சியில் ஈடுபட்டு வந்தார்.
  •  கல்வியில் சிறந்து விளங்கிய திசாநாயக்க தம்புத்தேகம காமினி மகா வித்தியாலயம் மற்றும் தம்புத்தேகம மத்திய கல்லூரியில் தனது கல்வியைப் பெற்றார்.
  •  கல்லூரியிலிருந்து சிறப்பாக படித்த அவர் பல்கலைக்கழக நுழைவு தேர்வில் முதல் மாணவராக தேர்வும் ஆனார். 
  •  இவர் இளமைப் பருவத்திலிருந்தே புத்தககம் படிக்கும் ஆரவத்தினை கொண்டிருந்தார். வாசிப்பின் மீதுள்ள ஆர்வத்தினால் சிலசமயங்களில் மரத்தின் மீது ஏறி இருந்து புத்தகம் படிப்பதாகவும் அவருடைய தாயர் கூறி இருக்கின்றார்.
  •  பாடசாலைப் பருவத்தில் இருந்து ஜே.வி.பி.யில் கட்சியில் தீவிரமாக ஈடுபட்ட திஸாநாயக்க, 1987ல் ஜே.வி.பி.யில் இணைந்து, மாணவர் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு, 1987-1989 ஜே.வி.பி கட்சி போராட்டங்களில் ஈடுபட்டும் வந்திருந்தார்.
  •  இலங்கையில் நடந்த மக்கள் புரட்சி போராட்டத்திற்கு இவர் முக்கியமான காரணமாக இருந்தமையையும் குறிப்பிடலாம்.
  •  தற்போது இலங்கையின் ஜனாதிபதியாக இருக்கும் இவர் போதைப்பொருளுக்கு எதிராக அதனை கட்டுப்படுத்துவதற்கு கடுமையாக போராடி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!