பாடசாலை வாகனங்களுக்கு பாதுகாப்பு கெமராக்களை பொருத்துவது கட்டாயம் - பிமல் அறிவிப்பு!
#SriLanka
#school van
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 hours ago
பாடசாலை வாகனங்களில் பாதுகாப்பு கெமராக்களை பொருத்துவதன் அவசியம் குறித்து, எடுத்துரைத்த போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இந்த திட்டம் அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், பொது போக்குவரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான துன்புறுத்தல் அதிகரித்துள்ளது எனவும், இதுபோன்ற சம்பவங்களைக் குறைக்க அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் உறுதியளித்தார்.
பாடசாலை போக்குவரத்து சேவைகள் மற்றும் அலுவலக போக்குவரத்து சேவைகளுக்கான வழிகாட்டுதல்கள் ஜனவரி 2026 முதல் அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் மேலும் அறிவித்துள்ளார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
