ஆயுதங்களை விரும்பி ஏற்ற இனமல்ல எங்கள் இனம்! (வீடியோ இணைப்பு)

#SriLanka
Mayoorikka
1 hour ago
ஆயுதங்களை விரும்பி ஏற்ற இனமல்ல எங்கள் இனம்! (வீடியோ இணைப்பு)

போர்க்காலப்பகுதியில் ஊடகவியலாளர்கள், ஊடகப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை, ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல் செயற்பாடுகளுக்கும் நீதி பெறுக் கொடுக்கப்பட வேண்டும். 

ஊடக சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டால் தான் நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கப்படுமென தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

 பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (23) நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சுக்கான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,


 கடந்த போர்க்காலப்பகுதியில் ஊடகவியலாளர்கள், ஊடகப்பணியாளர்கள் படுகொலைசெய்யப்பட்டமை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை, ஊடகநிறுவனங்கள் மீதான தாக்குதல் செயற்பாடுகளுக்கும் நீதி பெறுக் கொடுக்கப்படவேண்டும்.

 முல்லைத்தீவு, மன்னார் மாவட்ட பொது மருத்துவமனைகளை கஸ்ட மருத்துவமனைகள் பட்டியலில் இருந்து நீக்குவதுடன்,நாட்டின் ஏனையபாகங்களைப்போன்று வன்னிப் பிராந்தியத்திற்கும் சமத்துவ அடிப்படையிலும்இ சமச்சீரான முறையிலும் சுகாதார வளப் பங்கீடுகளை மேற்கொள்ள வேண்டும்.

 அதேவேளை வடக்கு மாகாணத்தில் கடந்த 2019ஆம்ஆண்டு முறையாக நேர்முகத்தேர்வில் பங்குபற்றி நியமனம் வழங்கப்பட்டு பின்னர் இரத்துச்செய்யப்பட்ட சுகாதார உழியர்கள் 454பேரையும் எதிர்வரும் 2026ஆம் ஆண்டில் மீளஆட்சேர்ப்புச்செய்ய வேண்டும்.

 இந்த பேரவையிலே கடந்த ஓராண்டுகாலமாக சுகாதாரத்துறையின் சமச்சீரற்ற வளப்பரம்பல் தொடர்பில் பலமுறை விவாதித்திருக்கிறேன்.

 2026ஆம் ஆண்டில் எங்கள் முல்லைத்தீவு, மன்னார் மாவட்ட பொது மருத்துவமனைகளை கஸ்ட மருத்துவமனைகள் பட்டியலில் இருந்து நீக்கிவிடுங்கள் என்ற கோரிக்கையை இன்றும் எனது முதல் கோரிக்கையாக இந்தப் பேரவையிலே முன்வைக்கிறேன்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!