வங்கி அட்டைகளை பயன்படுத்தி பேருந்து டிக்கெட் கொள்வனவு செய்யும் முறை நாளை முதல் ஆரம்பம்!
வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பேருந்து டிக்கெட்டுகளை கொள்வனவு செய்யும் முறை நாளை முதல் செயல்படுத்தப்பட உள்ளது.
இதற்கான ஆரம்ப நிகழ்வு நாளைய தினம் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், டிஜிட்டல் அமைச்சகம் மற்றும் போக்குவரத்து அமைச்சகம் இதனை நடத்தவுள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் பிமல் ரத்நாயக்க இந்நிகழ்விற்கு தலைமை தாங்கவுள்ளார்.
சமீபத்தில் நாடாளுமன்றத்தில் பேசிய அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பேருந்து கட்டணம் செலுத்திய பிறகு மீதமுள்ள பணத்தை செலுத்தாதது ஒரு பெரிய பிரச்சனை என்றும், அதற்கு தீர்வாக வங்கி அட்டை மூலம் பேருந்து கட்டணங்களை செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறினார்.
பேருந்து பயணிகள் டிக்கெட்டில் ஏராளமான மோசடி மற்றும் ஊழல் நடைபெறுவதாகவும், இதன் காரணமாக, வங்கி அட்டைகள் மூலம் பேருந்து டிக்கெட்டுகளுக்கு பணம் செலுத்தும் வாய்ப்பை வழங்குமாறு பெரிய கோரிக்கை வந்ததாகவும் அமைச்சர் கூறியமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
