மீண்டும் தொடங்கப்படும் என அறிவித்திருந்தும் நாட்டில் திரிபோஷாவிற்கு பற்றாக்குறை!

#SriLanka
Mayoorikka
1 hour ago
மீண்டும் தொடங்கப்படும் என அறிவித்திருந்தும் நாட்டில் திரிபோஷாவிற்கு பற்றாக்குறை!

நாடு முழுவதும் உள்ள பல மகப்பேறு மற்றும் சிறுவர் வைத்தியசாலைகளில் திரிபோசாவுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

 மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் மருத்துவ தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் மருத்துவர் சமல் சஞ்சீவ இதனைத் தெரிவித்துள்ளார்.

 தற்போது நிலவும் இந்தத் தட்டுப்பாடு காரணமாக, திரிபோசா குறிப்பிட்ட சில பிரிவினருக்கே வழங்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார். 

 அதன்படி தற்போது மூன்று வயதுக்கு மேற்பட்ட மிகக் கடுமையான போஷாக்குக் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு, அத்துடன் இரும்புச் சத்து குறைபாடுள்ள தாய்மார்கள் மற்றும் குறைந்த எடையுள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு மட்டுமே திரிபோஷா வழங்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

 கடந்த பல வருடங்களாக மூன்று வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு திரிபோசா வழங்கப்படவில்லை என்றும், இந்தத் திட்டம் மீண்டும் தொடங்கப்படும் என அதிகாரிகள் அறிவித்த போதிலும், இதுவரை அரசாங்கம் அதனை நடைமுறைப்படுத்தத் தவறிவிட்டதாகவும் வைத்தியர் சஞ்சீவ தெரிவித்தார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!