பல்வேறு வகையான மரக்கன்றுகளுடன் சிறப்பாக இடம்பெற்று வரும் கார்த்திகை வாசம் மலர்க்கண்காட்சி!
#SriLanka
#Jaffna
#Nallur
#Tree
Mayoorikka
5 hours ago
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் வட மாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு நடாத்துகின்ற கார்த்திகை வாசம் மலர்க்கண்காட்சி நல்லூர் கிட்டு பூங்காவில் (சங்கிலியன் பூங்கா) கடந்த 14ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

குறித்த கண்காட்சி எதிர்வரும் 23 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை வரை நடைபெறவுள்ளது. இதில் உள்ளூர் உற்பத்தியாளர்களின் பல்வேறுவகையான மரக் கன்றுகள் காட்சிக்கு வைக்கப்பட்டு விற்கப்பட்டு வருகின்றது. பூ மரங்கள் தொடக்கம் பல பயன்தரும் மற்றும் பெறுமதியான மரக் கன்றுகளும் விற்பனையாகி வருகின்றன.

குறித்த மலர்க் கண்காட்சியில் பாடசாலை மாணவர்களுக்கு மரக் கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

(வீடியோ இங்கே )
அனுசரணை
