பாதாள உலகக் குழுவினர் அரசியல் தலைவர்களின் அடைக்கலத்தில் பாதுகாக்கப்பட்டனர்! ஜனாதிபதி

#SriLanka
Mayoorikka
4 hours ago
பாதாள உலகக் குழுவினர் அரசியல் தலைவர்களின் அடைக்கலத்தில் பாதுகாக்கப்பட்டனர்! ஜனாதிபதி

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு பிரிவில் பாதாள உலகக்குழுவினர் கடமை புரிந்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

ஆனால் தற்போது எந்தவொரு குற்றவாளிக்கும் அரசியல் அடைக்கலம் வழங்காத அரசாங்கமே அரச இயந்தியரத்தை இயக்குவதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

 தேசிய பேரழிவாக மாறியுள்ள போதைப்பொருட்களிலிருந்து இலங்கை சமூகத்தை விடுவிப்பதை நோக்கமாகக் கொண்ட ‘முழு நாடுமே ஒன்றாக’ என்ற கருப்பொருளில் தேசிய செயற்பாடு, இன்று தங்காலை பொது விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது. நாட்டின் இளைஞர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிக்கும் நோக்கில், நாடு முழுவதும் ஒன்பது மாகாணங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

 இதன் போது மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி – போதைப்பொருள் கடத்தல் மூலம் அதிகளவான நிதி ஈட்டப்படுகின்றது. திட்டமிடப்பட்டு குற்றச்செயல்களில் ஈடுபடும் பாதாள உலக்குழுவினர் அரசியல் தலைவர்களின் அடைக்கலத்தில் வாழ்கின்றனர். அவர்களுக்கு அதிகாரம் வழங்கியது யார்? போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மற்றும் பாதாள உலகக்குழுவினர் இந்த நாட்டில் அரசியல் அடைக்கலம் மூலமே பாதுகாக்கப்பட்டு வந்துள்ளனர். அதுதான் உண்மை.

 ஒரு காலகட்டத்தில் அரசியல் கட்சிகளின் மத்திய செயற்குழுக்களின் அதிகாரம் பாதாள உலகக் குழுக்களின் வசம் காணப்பட்டது. அதேபோல் ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவில் பாதாள உலகக்குழுவினர் அடங்கியிருந்தனர். நாம் இந்த இடத்தில் உறுதிபட ஒரு விடயத்தினை தெரிவித்துக்கொள்கின்றோம். 

எந்தவொரு குற்றவாளிக்கும் அரசியல் அடைக்கலம் வழங்காத அரசாங்கம் ஒன்றே ஆட்சியில் உள்ளது. எந்தவொரு போதைப்பொருள் குற்றவாளிக்கும் அரசியல் அடைக்கலம் வழங்கப்படமாட்டாது. மக்கள் எமக்கு ஆணை வழங்கியுள்ளனர். இதில் மக்களின் எதிர்ப்பார்ப்பு தங்கியுள்ளது. 

எனவே தலைவர்கள் என்ற ரீதியில் மக்களின் அபிலாஷைகளையும் எதிர்ப்பார்ப்புக்களையும் பூர்த்தி செய்யவேண்டிய பாரிய பொறுப்பு எமக்கு உள்ளது அதனாலேயே நாம்போதைப்பொருள் தேசிய வேலைத்திட்டத்தினை ஆரம்பித்துள்ளோம். ஆனால் இன்று சிலர் அதனை முடக்குவதற்கு முயற்சிக்கின்றனர்.

 அனைவரும் ஒரு இலக்கினை நோக்கிபயணிக்கும் போது அவர்கள் இந்த சமுதாயத்தினை திசை திருப்புவதற்கு முயற்சிக்கின்றனர். ஆனால் அந்த வலையில் நாட்டு மக்கள் சிக்கமாட்டார்கள். நாம் இந்த திட்டத்தினை மேலும் விரிவுபடுத்துவோம். போதைப்பொருள் மோசடியை நாம் இந்த நாட்டில் இருந்து முற்றாக ஒழிப்போம்.

 இந்த செயற்பாடுகளில் பணியாற்றும் ஒவ்வொருவரையும் நாம் பாதுகாப்போம். அவர்களுக்காக நாம் முன்னிற்போம். நேற்று இரவும் போதைப்பொருளுடன் மீன்பிடிபடகொன்று கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த மீன்பிடி படகு இன்று இரவு கரைக்கு கொண்டுவரப்படும்.

 கடற்படையினர் நாட்டின் கடற்பிராந்தியங்களில் போதைப்பொருள் கடத்தலை முறியடிப்பதற்கு பாரியளவில் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். இதேவேளை போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்திற்கு எதிராக பலர் பல சூழ்ச்சி திட்டங்களை மேற்கொண்டுவருகின்றனர்.

 அரசாங்கத்தின் இந்த இலக்கை முறியடிப்பதே அவர்களின் நோக்கம். அதற்காக மக்கள் எதிர்ப்பு பேரணிகள் போராட்டங்களும் ஏற்பாடு செய்யப்படலாம் என தெரிவித்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!