கரைச்சி பிரதேச செயலகத்தில் கலாசாரப்பெரு விழா 2025!
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் கரைச்சி பிரதேச செயலகமும் கலாசாரப் பேரவையும் இணைந்து நடாத்தும் கலாசாரப்பெருவிழா 2025 தற்போது கரைச்சி பிரதேச செயலகத்தில் நடைபெற்று வருகின்றது.
கரைச்சி பிரதேச செயலாளரும் கலாசாரப் பேரவைத் தலைவருமான த.முகுந்தன் தலைமையில் நடைபெறும் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சு.முரளிதரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி) அஜிதா பிரதீபன் சிறப்பு விருந்தினராகவும், ஓய்வு பெற்ற ஆசிரிய ஆலோசகரும் சமய, சமூக, இலக்கிய விற்பன்னர் செல்வராணி சோமசேகரம்பிள்ளை கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் கலைநிகழ்வுகள், கரை எழில் - 9 நூல்வெளியீடு, மற்றும் கலைஞர்களுக்கான கரை எழில் விருது ,கலைஞர்களுக்கான ஊக்குவிப்பு தொகை என்பன வழங்கப்பட்டன.குறித்த நிகழ்வில் கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன் கரைச்சி பிரதேச சபைத்தவிசாளர் அ.வேழமாலிகிதன், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ,பிரதேச சபை உறுப்பினர்கள், மாவட்ட பொது அமைப்பு சார்ந்தோர், கலைஞர்கள், பிரதேச மக்கள், பாடசாலை மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
