திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: விகாராதிபதியின் பக்கா பிசினஸ் ப்ளான்! புட்டுப்புட்டு வைத்த மனோகணேசன்
அந்த சிறு காணி, 2024 ஜுன் என்ற கால வரையறை கொண்ட அனுமதியுடன் விகாராதிபதிக்கு, கரையோர பாதுகாப்பு திணைக்களத்தால் வழங்க பட்டு இருந்தது.
ஆரம்பத்தில், அங்கே ஒரு மத பள்ளியும், பிற்காலத்தில் உணவகத்தையும் விகாராதிபதி நடத்தினார். அந்த காணி கடற்கரையில் மரங்கள் வளர்ந்து நிற்கும் ஒரு சோலை மாதிரி இருக்கிறது.
இதை கண்ட விகாராதிபதியின் "தொழிலதிபர்" மூளை வேலை செய்துள்ளது. வழங்க பட்ட அனுமதிக்கு அப்பால் காணி பிடிப்பை செய்து, கடற்கரையில், கூடாரங்கள் அமைத்து, அங்கே வாடிக்கையாளர் உட்கார நாற்காலிகள் போட்டு, ஒரு கடற்கரை உல்லாச விடுதி நடத்த, "பக்கா பிசினஸ் ப்ளான்" ஒன்றை, போட்டு வேலையை விகாராதிபதி ஆரம்பித்துள்ளார்.
இது கண்டு பரபரப்பு அடைந்த திணைக்களம், நீதி மன்றம் மூலம் சட்ட நடவடிக்கை எடுத்தது. இந்திலையில், வர்த்தக காணி பிடிப்பு என்ற சட்ட விரோத நடவடிக்கையை மூடி மறைக்க, அதை சிறு பெளத்த விகாரையாக காட்ட, இந்த அதிபதி, கெளதமரின் அனுமதி இல்லாமல் அவரது, சிலையை நள்ளிரவில், அங்கே போய் வைக்கத்தான் விஷயம் சூடு பிடித்துள்ளது. இப்போது, ஞானசாரரும் பெட்ரோல் ஊற்ற போய் உள்ளார்.
இனி என்ன? நீதிமன்றத்துக்கு விஷயத்தை மீண்டும் திணைக்களம் கொண்டு போயுள்ளது. நீதி மன்றம் தீர்ப்பு அளிக்கும். இடைக்கால தடை பெரும்பாலும் வரும். அப்புறம் விகாராதிபதி அப்பீல் செய்வார். இப்படியே தான் தீர்வு வர வேண்டும்.
ஜனாதிபதி அனுர, நீதிமன்றம் தரக்கூடிய தீர்ப்புகளை அமுல் செய்ய தனது போலிஸ், பாதுகாப்பு பிரிவினருக்கு பணிப்புரை இடுவார் என நம்புகிறேன்.
இவ்வாறு மனோகணேசன் தனது முகநூல் பக்கத்தி பதிவேற்றம் செய்துள்ளார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
