அனுமதியின்றி திடீரென முளைக்கும் புத்தர் சிலைகள்: பின்னணியில் யார்?
அண்மைக்காலங்களாக இலங்கையின் திருகோணமலை, அம்பாறை, மொனராகளை மையமாக வைத்து சமூகத்தில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தும் சம்பவங்கள் தொடர் முறையில் இடம்பெற்று வருகின்றன.
வெல்லவாய – முன்பள்ளி கட்டிடம் தொடர்பான கலகம் மொனராகள வெல்லவாய பகுதியில் உள்ள முன்பள்ளி கட்டிடத்தை பௌத்த விகாரையாக மாற்றும் முயற்சி காரணமாக, பிக்குகள் மற்றும் அப்பகுதி மக்களுக்கிடையில் நேற்று திடீர் மோதல் ஏற்பட்டது.
கட்டிடம் எந்த நோக்கத்தில் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற கேள்வி சில நொடிகளில் சூழ்நிலையை சூடுபிடிக்கச் செய்தது என்று அங்கிருந்த மக்கள் தெரிவித்துள்ளனர். திருகோணமலை – புத்தர் சிலை இரவோடு இரவாக அகற்றம் திருகோணமலையின் மக்கள் வழக்கமாகப் பயன்படுத்தாத இடத்தில் திடீரென புத்தர் சிலை நிறுவ முயற்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, பொலிசார் நள்ளிரவு நடவடிக்கையில் அந்த சிலையை அகற்றியுள்ளனர்.
மேலும், சிலையை அகற்றும் போதே ஒரு பிக்கை பொலிசாரை அறைந்த சம்பவமும் நடந்துள்ளதாக தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. அமைச்சர் ஆனந்த விஜேபாலவும் “இது பாதுகாப்பு காரணங்களுக்காகவே அகற்றப்பட்டது” என்று விளக்கம் வழங்கியுள்ளார். அம்பாறை – உகந்தை மலையில் புத்தர் சிலை விவகாரம் உகந்தை மலை பகுதியில், முருகன் ஆலயத்துக்கு அருகில் புத்தர் சிலை மற்றும் பௌத்த கொடியை நிறுவியதாக உள்ளூர்வாசிகள் புகார் தெரிவித்துள்ளனர். இது அந்த பகுதி மக்களிடையே பெரும் பதட்டத்தை உருவாக்கியுள்ளது.
இதற்கு எதிராக சில அரசியல் மற்றும் சமூக அமைப்புகள் “இது இன நல்லிணக்கத்தை பாதிக்கும் செயல்” “பல்வேறு மதங்களுக்கு பொதுவான இடங்களில் அனுமதியின்றி நடவடிக்கை எடுக்கக் கூடாது” என்று எச்சரித்து வருகின்றன.
ஆனால், சில அரசியல் பிரதிநிதிகள் “உகந்தமலையில் புத்தர் சிலை இல்லை” என்று மறுக்கும் நிலையும் தொடர்கிறது. ஒன்றாக பார்க்கும் போது – பொதுமக்களின் முக்கிய கவலை இந்நிகழ்வுகள் எல்லாம் வேறு வேறு இடங்களில் நடந்தாலும், மக்களின் அனுமதியின்றி திடீரென சிலைகள் நிறுவப்படுதல், கட்டிடங்கள் பயன்பாட்டில் மாற்றங்கள் செய்ய முயற்சிகள் போன்றவை சமூகத்தில் பெரிய விவாதத்தையும் அச்சத்தையும் உருவாக்கியுள்ளது.
அதிகாரிகள் முழுமையான விளக்கம் வழங்குவார்களா?
சம்பவங்களுக்கு பின்னால் யார்? உள்ளனர் அல்லது வேண்டுமென்றே நாட்டில் இனவாதத்தை தூண்ட சிலரால் வைக்கப்படுகின்றதோ என்ற சந்தேகங்களும் எழுகின்றன.
(வீடியோ இங்கே )
அனுசரணை
