ஹற்றனில் பிள்ளையார் ஆலயம் அமைப்பதற்கு முன்வந்த பௌத்த பிக்கு!

#SriLanka
Mayoorikka
1 hour ago
ஹற்றனில் பிள்ளையார் ஆலயம் அமைப்பதற்கு  முன்வந்த பௌத்த பிக்கு!

ஹற்றன் நகரில் பிள்ளையார் ஆலயம் ஒன்றினை அமைப்பதற்கு பௌத்த பிக்கு ஒருவர் முன்வந்துள்ளார். பகவந்தலாக ராகுல தேரர் என்ற பிக்குவே இவ்வாறு முன்வந்துள்ளார். 

அவர் ஹற்றன் நகரிற்கு விஜயம் மேற்கொண்ட போது அங்குள்ள மக்களிடம் சந்திப்புக்களை மேற்கொண்ட வேளை இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

 பிள்ளையார் ஆலயம் ஒன்றினை அமைப்பதற்கு ஒவ்வொருவரிடமும் உதவி பெற்று தான் அந்த ஆலயத்தினை அமைத்து தருவதாகவும் கூறியுள்ளார்.

 திருகோணமலையில் பொது இடத்திலிருந்து அகற்றப்பட்ட புத்தர் சிலையை மீண்டும் அதே இடத்தில் வைத்து பௌத்த பிக்குகள் அடாவடிகளை மேற்கொண்டு மத வாதத்தையும் இனவாதத்தையும் தூண்டி வரும் இந்த வேளையில் இந்த பௌத்த பிக்கு மதங்களுக்கிடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த பிள்ளையார் ஆலயம் ஒன்றினை, தான் முன்னின்று அமைத்து தருவதாக கூறியுள்ளார்.

 உண்மையில் அது வரவேற்கத்தக்க விடயமே. இவ்வாறு எல்லா மதகுருமார்களும் இருந்தால் நாட்டில் மதவாதம் இனவாதத்திற்கு இடமே இருக்காது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!