இலங்கைக்கு கடத்தவிருந்த 20 கோடி பெறுமதியான ஐஸ் போதை மீட்பு!

#SriLanka
Mayoorikka
2 hours ago
இலங்கைக்கு கடத்தவிருந்த  20 கோடி பெறுமதியான ஐஸ் போதை மீட்பு!

இந்தியா தமிழ்நாடு எஸ்பி பட்டினம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக தனியார் பேருந்தில் கொண்டுசெல்லப்பட்ட இலங்கை ரூபாவில் சுமார் இருபதி கோடி ரூபா பெறுமதியான 1.500 கிலோ ஐஸ் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதியில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கடத்தி செல்வதற்கு கொண்டுசெல்லப்பட்டிந்திய ரூபாவில் 4.50 கோடி பெறுமதியான 1கிலோ 500 கிராம் ஐஸ் போதை பொருள் எஸ்பி பட்டிணம் அருகே வைத்து தனியார் பேருந்தில் இருந்து சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுளதுடன் சந்தேகத்தின் பெயரில் தனியார் பேருந்து நடத்துனர் மற்றும் சாரதி ஆகொயோர் கைது செய்யப்பட்டு ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்தில் தடுத்து வைத்து விசாரணைகள் இடம் பெற்று வருவதாக இராமேஸ்வரம் செய்திகள் தெரிவிக்கின்றன.

 ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளான தனுஷ்கோடி, மரைக்காயர்பட்டினம், வேதாளை, களிமண்குண்டு, தேவிபட்டினம், தொண்டி உள்ளிட்ட கடற்கரை பகுதியில் இருந்து தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா, ஐஸ் போதை பொருள், சமையல் மஞ்சள், கடல் அட்டை, செருப்பு, பீடி இலை பண்டல்கள், பூச்சி கொல்லி, உரம், அழகு சாதண பொருட்கள் உள்ளிட்டவைகள் சமீப காலமாக அதிக அளவு கடத்தப்பட்டு வருகிறது.

images/content-image/1763462296.jpg

 இந்த கடத்தல் சம்பவங்களை தடுப்பதற்காக இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லை பகுதியில் இலங்கை கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் கடற்கரை ஓரங்களில் கடத்தல் சம்பவங்களை மரைன் போலீசார், சுங்கத்துறை, உளவுத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் கண்காணிப்பையும் மீறி போதைப்பொருட்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பகிறது.

 இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதியில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக ஐஸ் போதை பொருள் கடத்தப்பட இருப்பதாகவும், ஐஸ் போதைப்பொருள் ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் தனியார் பேருந்தில் கொண்டுவர இருப்பதாகவும் ராமநாதபுரம் சுங்கத்துறை துணை ஆணையாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சுங்கத்துறை அதிகாரிகள் ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையான மீமிசல், எஸ்பி பட்டினம், தொண்டி, மோர் பண்ணை, தேவிபட்டினம், காரங்காடு உள்ளிட்ட பகுதிகளில் இன்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது மீமிசல் பேருந்து நிலையத்தில் இருந்து தொண்டி நோக்கி வந்த தனியார் பேருந்து ஒன்றை எஸ்பி பட்டினம் அருகே வைத்து சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி பேருந்துக்குள் சோதனை செய்தபோது பயணிகள் அமரும் இருக்கைக்கு கீழே கேட்பாரற்ற நிலையில் கிடந்த பேக் ஒன்றை எடுத்து சோதனை செய்தபோது அதில் ஐஸ் போதை பொருள் இருந்தது தெரியவந்தது.

 இதனையடுத்து ஐஸ் போதை பொருளை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் பேருந்தில் இருந்த பயணிகளிடம் அந்த பை குறித்து விசாரித்த போது யாரும் அந்த பைக்கு உரிமை கோராததால் பேருந்தின் நடத்துனர் மற்றும் ஓட்டுநர் இருவரையும் ராமநாதபுரத்தில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடாத்தி வருகின்றனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!