பாலர் பாடசாலை காணி விகாரைக்குரியது என பௌத்த பிக்குகள் அராஜகம்

#SriLanka
Mayoorikka
2 hours ago
பாலர் பாடசாலை காணி விகாரைக்குரியது என  பௌத்த பிக்குகள் அராஜகம்

மொனராகலை - வெல்லவாய பிரதேசத்தில் பாலர் பாடசாலை நடத்தப்படும் இடம் கிங்கினி ராஜ விகாரைக்கு சொந்தமானது என்று தெரிவித்ததால் குறித்த பகுதியில் பதற்றசூழல் உருவாகியுள்ளது.

 வெல்லவாய பிரதேசத்தில் பாலர் பாடசாலை நடத்தப்படும் இடம் கிங்கினி ராஜ விகாரைக்கு சொந்தமானது என்று தெரிவித்து அப்பகுதிக்கு பிக்குகள் சென்றுள்ளனர்.

 அங்கு சென்ற பிக்குகள் பாலர் பாடசாலை இடத்தைத் தாருங்கள் என உரிமை கோரி அப்பகுதி மக்களுடன் தர்க்கப்பட்டுள்ளனர். 

 அதனையடுத்து இடத்தை தரமுடியாது என்று பாலர் பாடசாலை உள்ள பிரதேசத்தை சேர்ந்த மக்கள் பலர் விவாதித்தனர். இதனால் பிக்குகளிற்கும் குறித்த மக்களுக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டு இறுதியில் மோதல் நிலையும் ஏற்பட்டுள்ளது. 

இதனால் அந்தப்பகுதி முழுவதும் பதற்றசூழல் உருவாகியுள்ளது. இதற்கிடையே திருகோணமலையில் புத்தர்சிலை வைக்கப்பட்டதால் பிக்குகளிற்கும் அப்பகுதி மக்களிற்கும் மோதல்நிலை உருவாகியுள்ளது. அத்துடன் பொலிஸார் மீதும் பிக்குகள் அறைந்து அராஜகத்தில் ஈடுபட்டனர்.

 இதனையடுத்து இன்று வெல்லவாய பிரதேசத்திற்குச் சென்று பிக்குகள் மக்களுடன் மோதலில் ஈடுபட்டுள்ளமை மக்களிடையே கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!