வெலிமடையில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தம்பதியினர் - ஒருவர் சடலமாக மீட்பு!
#SriLanka
#Flood
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 hour ago
வெலிமடை, போரலந்த, கண்டேபுஹுல்பொல பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட திருமணமான தம்பதியினர் காணாமல் போயுள்ளனர்.
வெலிமடை பிரதேச செயலகப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக நேற்று (17) மாலை இருவரும் இந்த விபத்தில் சிக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்றிரவு முழுவதும் அப்பகுதி மக்கள் தம்பதியினரைத் தேடி வந்த நிலையில், பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இறந்தவர் 32 வயதுடைய பெண் எனவும், காணாமல் போனவர் 37 வயதுடைய ஆண் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போனவரைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
