பலத்த மின்னல் தொடர்பில் எச்சரிக்கை விடுப்பு!
#weather
Mayoorikka
3 hours ago
வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த மின்னல் தொடர்பில் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.
இன்று (17) நண்பகல் வௌியிடப்பட்ட இந்த அறிவித்தல் இன்று இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் மழையுடன் கூடிய பலத்த மின்னல் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்பு காணப்படுகிறது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளையில், குறித்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைத்துக் கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
