யாழில் சீரற்ற காலநிலையால் முறிந்து விழுந்த மரம்: போக்குவரத்து பாதிப்பு

#SriLanka
Mayoorikka
4 hours ago
யாழில் சீரற்ற காலநிலையால் முறிந்து விழுந்த மரம்: போக்குவரத்து பாதிப்பு

யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் மரம் ஒன்று வீதிக்கு குறுக்கே முறிந்து விழுந்ததில் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டது.

 யாழில் நேற்றிரவு மழையுடன் வீசிய காற்று காரணமாக இந்த மரம் முறிந்து விழுந்துள்ளது. இதனால் மின்கம்பமும் முறிந்ததால் மின் தடையும் ஏற்பட்டது. அத்துடன் அராலி பகுதியில் 5 வீடுகளுக்குள் வெள்ளமும் புகுந்துள்ளது.

 இந்நிலையில் விரைந்து செயற்பட்ட வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தலைமையிலான குழுவினர், வீதிக்கு குறுக்காக முறிந்து விழுந்த மரத்தை வெட்டி போக்குவரத்தை சீர்படுத்தினர்.

images/content-image/1763373010.jpg

 அத்துடன் அராலி பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீரை வெளியேற்றும் பணியிலும் அந்த குழுவினர் ஈடுபட்டனர்.

 பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பொதுஇடம் ஒன்றில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டதாக வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் சண்முகநாதன் ஜயந்தன் தெரிவித்தார்.

 வடக்கு - கிழக்கில் பல பகுதிகளுக்கும் கிடைத்து வரும் கனமழை மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளது என்று யாழ். பல்கலைக்கழக புவியியல் துறைத் தலைவரும் காலநிலை அவதானிப்பாளருமான பேராசிரியர் நா.பிரதீபராஜா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!