அரசாங்கத்தின் அந்தர் பல்டி - அமைச்சர் ஆனந்த விஜேபால!!
பாதுகாப்பு காரணங்களுக்காகவே திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்டதாகவும் அது இன்று மீண்டும் அதே இடத்தில் வைக்கப்படுமெனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால சற்றுமுன் பாராளுமன்றில் அறிவித்துள்ளார்.
திருகோணமலையில் நேற்றிரவு வைக்கப்பட்ட புத்தர் சிலைக்கு சேதம் விளைவிக்கப்படும் என்று கூறப்பட்டதால் தான் அது அங்கிருந்து அகற்றப்பட்டதெனவும், பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், அந்த சிலை விகாரை அறநெறிப்பாடசாலையின் அதே காணியில் மீண்டும் வைக்கப்படும்.
இனி இப்படியான துரதிர்ஷ்டவமான சம்பவங்கள் நடக்காது எனவும் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் தொடர்பில் தமிழர்கள் பலரும் அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்ததுடன், வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவுக்கு நன்றியும் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் பாராளுமன்றத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் அறிவிப்பானது, பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
